நலத்திட்டங்கள் மக்களிடம் சென்றடைய அதிமுகவுக்கு வாக்களியுங்கள் : தளவாய் சுந்தரம் பிரச்சாரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2021, 5:34 pm
Admk Candidate -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : பெண்களுக்கு மாதா மாதம் 1500 ரூபாய், ஆண்டிற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் திட்டம் பொது மக்களை சென்றடைய வாக்காளர்கள் அதிமுகவுடன் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் பிரச்சாரம் செய்தார்.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளராக தளவாய்சுந்தரம் போட்டியிடுகிறார். அவர் இன்று ஐந்தாவது நாளாக ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வைரவிளை, சிவந்தி ஆதித்தனார் கல்லூரி நடுதீர்த்தபதி, தெங்கம்புதூர் சந்திப்பு, அம்பலபதி ,வீரபாகுபதி போன்ற பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அவரை ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெண்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இதனை அடுத்து அவர் தெங்கம்புதூர் சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து வாக்குகள் சேகரித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் பேசும்போது ஏற்கனவே தமிழக அரசு விவசாய கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி, பெண்களுக்கு தாலிக்கு தங்கம் போன்ற பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எல்லாவற்றையும்விட மேலாக இனி ,குடும்ப பெண்களுக்கு மாதம் ஒன்றுக்கு 1500 ரூபாய் மற்றும் ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் வழங்க உள்ளது. எனவே இந்தத் திட்டம் பொது மக்களை சென்றடைய வாக்காளர்கள் அனைவரும் அதிமுக பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Views: - 65

0

0