சுவர் இடிந்து பெண் பலி : இயற்கை உபாதை கழிக்க சென்ற போது சோகம்!!
Author: Udayachandran RadhaKrishnan16 October 2021, 4:26 pm
அரியலூர் : உஞ்சினி கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள உஞ்சினி கிராமத்தை சேர்ந்த நடராஜனின் மனைவி பழனியம்மாள். இவர் தனது கணவர் உயிரிழந்த நிலையில் மகனுடன் கரிமூட்டம் செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் தனக்கு சொந்தமான பயன்பாட்டிற்கு இல்லாத வீட்டிற்கு அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பழனியம்மாள் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து பழனியம்மாளை காணாத உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் சந்தேகமடைந்து இடிந்து விழுந்த வீட்டின் மண்ணை அப்புறபடுத்தி பார்த்ததில் பழனியம்மாள் உயிர் இழந்து கிடந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற இரும்புலிகுறிச்சி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண்மணி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
0
0