நம்ம வேலூருக்கு என்னதான் ஆச்சு? அடி குழாயுடன் சேர்த்து போடப்பட்ட சுவர் : ஒப்பந்ததாரர் மீது ஆக்ஷன் எடுத்த மேயர்…!!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2022, 9:32 pm
Vellore Contractor - Updatenews360
Quick Share

வேலூர் : போர்வேலோடு சேர்த்து கழிவுநீர் கால்வாய் தடுப்பு சுவர் அமைத்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து நிலுவை பணிகளையும் மேற்கொள்ள மேயர் சுஜாதா தடை விதித்துள்ளார்.

வேலூர் மாநகராட்சி 2 வது மண்டலத்திற்குட்படட் சத்துவாச்சாரி வீரராகவபுரத்தில் 19 வது வார்டில் தெருவோரம் இருந்த போர்வேலுக்கும் சேர்த்து கழிவுநீர் கால்வாய் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது.

இதனையடுத்து உடனடியாக அதனை சீரமைக்க ஆணையர் உத்தரவிட்டதை அடுத்து ஒரு பொறியாருடன் அடங்கிய மாநகராட்சி குழு சம்பவ இடத்திற்க்கு சென்று கழிவுநீர் கால்வாயின் தடுப்பு சுவரை உடைத்து எடுத்து போர்வேல்லை மீட்டனர்.

பின்னர் போல்வேலின் மேல்பாகத்தை எடுத்து சென்றனர். தற்காலிகமாக போர்வேலின் குழாய் மூடப்பட்டுள்ளது. இதன் உயரத்தை உயர்த்துவதற்க்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் ஆய்வு செய்து உயரத்தை உயரத்தி பணிகள் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதாவை தொலைபேசி மூலம்தொடர்பு கொண்டு கேட்ட போது, ஏற்கனவே மாநகராட்சியில் இது போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றதை கருத்தில் கொண்டு
இதுபோன்று செயல்படக் கூடாது என ஸ்மார்ட் சிட்டி பணிகளை மேற்கொண்டு வரும் அனைத்து ஒப்பந்ததாரர்களையும் அழைத்து கூட்டம் போட்டு ஆலோசனை வழங்கினோம்.

ஆனால் தற்போது போர்வோலோடு கழிவு நீர் கால்வாய் அமைத்த அந்த பணியின் ஒப்பந்ததாரர் குட்டி சரவணன் ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும், நிலுவையில் உள்ள வேறு எந்த பணிகளையும் அவர் செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறினார்.

மேலும் வேலூர் மாநகராட்சிக்கும் அரசுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த் குமார் தொலைபேசியில் கூறினார்.

மேலும் இப்போது நடைபெற்று வரும் பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் விடப்பட்ட ஒப்பந்தம் என்றும், தகுதியில்லாத நபர்களுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதால் இது போன்று நடைபெறுவதாகவும் கூறினார்.

Views: - 420

0

0