கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி ஆபத்தை தரலாம்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை…!!

27 February 2021, 5:02 pm
prgnent vaccine - updatenews360
Quick Share

20 வயது முதல் 40 வயது வரையிலான பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கருவுறுதல் பாதிக்கும் என்பது வதந்தி என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்தியாவில் கடந்த மாதம் முதல் மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் ஆண்களை விட பெண்கள் குறைவாகவே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

20 வயது முதல் 40 வயது வரையிலான பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கருவுறுதல் பாதிக்கும் என கருதி தடுப்பூசியை தவிர்த்து வருகின்றனர். இதுபற்றி புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி டீனும், மகப்பேறு நிபுணருமான டாக்டர் பூவதி கூறும்போது,

கொரோனா தடுப்பூசி மலட்டு தன்மைக்கு காரணமாகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கட்டுக்கதைகளால் ஏற்படுத்தப்பட்ட பீதியால் இளம்பெண்கள் தடுப்பூசியை தவிர்க்கிறார்கள். இதில் உண்மை இல்லை. ஆகவே கொரோனாவை தடுக்க இளம்பெண்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்றார். தனியார் மருத்துவமனை மகப்பேறு நிபுணர் டாக்டர் புவனேஸ்வரி கூறும்போது, மலட்டு தன்மைக்கு கொரோனா தடுப்பூசி காரணமாக அமையாது என பல ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன.

அதே நேரம் கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. தடுப்பூசி போடும் போது சில நேரங்களில் காய்ச்சல் வரும் என்பதால் கர்ப்பணிகளுக்கு அது சிரமத்தை ஏற்படுத்தும். அதே நேரம் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பாக தடுப்பூசி போட்டுக்கொள்வதால் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Views: - 9

0

0