ஏற்கனவே விலை தாறுமாறு.. இதுல இது வேறயா : பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2021, 7:37 pm
Water In Petrol -Updatenews360
Quick Share

திருப்பூர் : தண்ணீர் கலந்த பெட்ரோல் வாகனங்களில் நிரப்பட்டதாக கூறி, பெட்ரோல் பங்கை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் – போயம்பாளையம் பிரிவில், மோகன் என்பவர் பார்வதி ஏஜன்சீஸ் என்ற பெயரில் பாரத் பெட்ரோலிய நிறுவன பெட்ரோல் பங்கை நடத்தி வருகிறார். இந்நிலையி்ல் அந்த பெட்ரோல் பங்கில், இரு சக்கர வாகனங்களில் பெட்ரோல் நிரப்பியவர்கள், பெட்ரோல் தண்ணீர் கலந்து வருவதாக புகார் தெரிவித்து பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டனர்.

மேலும் தண்ணீர் கலந்த பெட்ரோலை இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நிரப்பியதால், வாகனங்கள் பழுதடைந்துவிட்டதாகவும் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து வாகனங்களில் பெட்ரோல் நிரப்பியவர்கள் பெட்ரோல் பங்கில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதனாபடுத்தினர். பொதுமக்கள் கூறுகையில், அனைத்து வாகனங்களிலும் தண்ணீர் கலந்த பெட்ரோலை நிரப்பியதால் வாகனங்கள் அனைத்தும் பழுதடைந்துவிட்டதாகவும், பெட்ரோல் பங்கின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கூறுகையில், பெட்ரோல் சேமிக்கும் டேங்கில், மழைநீர் புகுந்ததால் பெட்ரோலில் தண்ணீர் கலந்துவிட்டதாகவும், தண்ணீர் கலந்தது தெரிய தாமதமானதால், இந்த தவறு நிகழ்ந்துவிட்டதாகவும், பழுதடைந்த வாகனங்கள் சரி செய்து தருவதாகவும் தெரிவித்தனர்.

Views: - 439

0

0