செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றம் படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பு : பொதுப்பணித்துறை அதிகாரிகள்..

25 November 2020, 3:57 pm
Chembarambakkam Water - Updatenews360
Quick Share

சென்னை : நிவர் புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் நிரம்பும் தருவாயில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில நீரின் அளவு அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ள முக்கிய நீர் நிலைகளில் வேகமாக முழு கொள்ளளவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

22 அடியை செம்பரம்பாக்கம் நீர் மட்டம் நெருங்கி வருவதால் நண்பகல் 12 மணிக்கு எரியில் இருந்து நீர் திறக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி தற்போது உபரி நீர் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட போது 3 முறை சைரன் ஒலி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுமார் 5 வருடங்களுககு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே லும் அடையாறு வழியே செம்பரம்பாக்கம் நீர் செல்வதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்போது வினாடிக்கு 4400 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது வினாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படும் நிலையில் படிப்படியாக நீரின் அளவு அதிகரிப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 18

0

0