பில்லூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.!!

4 August 2020, 10:03 am
Pillur Dam - Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு 22 ஆயிரம் கன அடி நீர் வரத்து வந்துகொண்டிருக்கிறது. இதனால் அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் தற்போது 97 அடி வரை நீர் நிரம்பி உள்ளது.

இதனால் அணையின் பாதுகாப்பு கருதி இன்று காலை 9 மணிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Views: - 42

0

0