கேரளாவில் கனமழையால் அதிகரித்த நீர்மட்டம் : ரெட் அலர்ட்டால் இடுக்கி அணை 3 ஆண்டுகளுக்கு பின் திறப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2021, 1:18 pm
Idukki Dam Open -Updatenews360
Quick Share

கேரளா : இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆர்ச் வடிவ அணையான கேரளாவின் இடுக்கி அணைக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்குப்பின் தற்போது அணை திறக்கப்பட்டது.

75 டி.எம்.சி., நீர் கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையின் மொத்த நீர்மட்டம் 2,403 அடி என கடல் மட்டத்திலிருந்து கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இடுக்கி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் இன்று காலை நிலவரப்படி இடுக்கி அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 15,000 கன அடியாக அதிகரித்தது.

அணை நீர்மட்டம் 2,398.04 அடியாக உயர்ந்தது. இதையடுத்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டு அணை திறக்கப்பட்டது.

கேரளா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின் மற்றும் கேரள மின்வாரிய அமைச்சர் கிருஷ்ணன்குட்டி ஆகியோர் அணையை திறந்து வைத்தனர். அணையின் மதகுகள் படிப்படியாக 35 சென்டி மீட்டர் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியில் துவங்கி ஒரு லட்சம் கன அடிவரை படிப்படியாக ஒரு லட்சம் கன அடி வரை தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு தென்மேற்கு பருவ மழை கன மழையாக பெய்து வெள்ள பிரளயம் உருவானபோது இடுக்கி அணை நீர்மட்டம் 2,401 அடியாக உயர்ந்ததை அடுத்து அந்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி 36 ஆண்டுகளுக்குப்பின் இடுக்கி அணை திறக்கப்பட்டது.

இடுக்கி அணை திறக்கப்பட்டதால், அணைநீர் வழிந்தோடும் இடுக்கி மாவட்டம் செறுதோணி, வாழைதோப்பு முதல் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா வரையிலான தாழ்வார பகுதி மக்கள் பெரும் பாதிப்படைந்தனர்.

Views: - 334

0

0