நாங்களும் காக்கிச் சட்டை, நீங்களும் காக்கிச் சட்டை : ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து ஆய்வாளர் அறிவுரை!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2024, 11:59 am

மதுரையில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட ஆட்டோக்களை நிறுத்தி அறிவுரை வழங்கிய போக்குவரத்து காவல்துறையினர்.

மதுரை மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் ஷேர் ஆட்டோ களில் அதிகப்படியான பயணிகளையும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளையும் ஏற்றி செல்வதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்து வருவதோடு உரிய அனுமதி இன்றி ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து காவல்துறையினருக்கு புகார் வந்தது.

இதனை எடுத்து மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இருந்து பெரியார் நோக்கி செல்லும் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்த போது அதில் நான்கு பயணிகளுக்கு பதிலாக எட்டுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச்சென்ற ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி காவல்துறையினர் போக்குவரத்து விதிமுறைகளை சுட்டிக்காட்டி அறிவுரை வழங்கினர். தொடர்ந்து இதுபோன்று உரிய அனுமதி இல்லாமல் ஷேர் ஆட்டோக்களை இயக்கக் கூடாது எனவும் அளவுக்கு அதிகமாக பயணிகளையும் குழந்தைகளையோ ஏற்றி செல்லக்கூடாது எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

  • New Update Announcement From Jana Naygan team Today ஜனநாயகன் படத்தின் மாஸ் அப்டேட்.. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!