இந்திய தடுப்பூசியை வெளிநாடுகள் எதிர்பார்த்து காத்துள்ளது நமக்கு கிடைத்த பெருமை : தமிழிசை!!

28 February 2021, 1:12 pm
Tamilisai- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : நம் நாட்டில் தயாரித்த கொரானா தடுப்பூசியை நாமே போட்டுக் கொள்கிறோம் என்பது மிகப்பெரிய பெருமை நம் நாட்டு தடுப்பூசியை 50க்கும் மேற்பட்ட நாடுகள் எதிர்பார்த்துக் காத்திருப்பது நமது நாட்டுக்கு கிடைத்த பெருமை என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் மண்டைக்காடு பகுதியில் அமைந்துள்ள மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயம் ஒன்று இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த கோயிலும் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த பெண் பக்தர்கள் இந்த கோயிலுக்கு இருமுடி கட்டுடன் வந்து அம்மனை தரிசித்து செல்வது வழக்கம்.

கேரளா கொல்லம் பகுதியை சேர்ந்த பெண்கள் தலையில் இருமுடி கட்டுடன் வந்து பொங்கலிட்டு அம்மனை தரிசித்து செல்வதால் இது பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.

இந்த கோயிலில் வருடா வருடம் மாசிக்கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறும். இந்த வருட மாசிக்கொடை விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதில் தெலுங்கனா ஆளுநர் தமிழிசை செளந்தர் ராஜன் கலந்து கொண்டார். முன்னதாக மண்டைக்காடு வருகை தந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜனுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் மா. அரவிந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் சிறப்பான வரவேற்பளித்தனர்.

கொடியேற்ற நிகழ்வில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா பத்தாவது நாள்  நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைகிறது. பக்தர்கள் பாதுகாப்பிற்காக குமரி நெல்லை தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் 

மண்டைக்காட்டில் நடைபெறும் சமய வகுப்பு மாநாட்டை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்த தெலுங்கான ஆளுனர் டாக்டர் தமிழிசை செளந்தர் ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கூறியதாவது, நம் நாட்டில் தயாரித்த கொரோனா தடுப்பூசியை நாமே போட்டுக்கொள்கிறோம் என்பது மிகப்பெரிய பெருமை நம் நாட்டு தடுப்பூசியை 50-க்கும் மேற்பட்ட நாடுகள் எதிர்பார்த்து காத்திருப்பது நாட்டுக்கே பெருமை என்றும் கொரோனா நம்மளை விட்டு முழுமையாக விலகவில்லை என்றும் அடுத்ததாக பொதுமக்களுக்கான தடுப்பூசி வர இருப்பதாகவும் பொதுமக்கள் அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

Views: - 7

0

0