ஒற்றை சீட்டுக்காக கூட்டணி.. மன்னித்துவிடுகிறோம் : வேல்முருகனை சீண்டும் தவெக போஸ்டர்.!!

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2025, 4:59 pm

வேல்முருகனை மன்னித்துவிடுகிறோம் என மதுரையில் தவெகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை நேரில் அழைத்து விருது, பரிசு வழங்கி கௌரவித்து வருகிறார். அதில் சிலர் விஜய்யை கட்டிப்பிடித்தும், முத்தம் கொடுத்தும், புகைப்படம் எடுத்து கொண்டனர்.

இதனை அண்மையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் முகம் சுளிக்கும் வகையில் பேசியிருந்தார். பெண் பிள்ளையை பெற்று வளர்த்து ஆளாக்கி, அடுத்தவர் மனைவியாக போகிறவர்கள், ஒரு சினிமா கூத்தாடியை வெறும் 2 கிராமுக்காக கட்டிப்பிடிப்பதா என கொச்சையாக பேசியிருந்தார்.

இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு பதிவு செய்தனர். வேல்முருகனை தவகெவினர், பாஜகவினர் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்தனர்.

விஜய்யை கண்டித்து சேலத்தில் தவாகவினர் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். இதற்கிடையில் விஜய் நேருக்கு நேர் பேச தயாரா என வேல்முருகன் கேள்வி கேட்டிருந்தார். இதனால் தவெக – தவாக இடையே போஸ்டர் மோதல் தொடங்கியது.

இந்த நிலையில் மதுரையில் ஒற்றை சீட்டுக்கு கூட்டணிக்காக குவியவரே? குருதி கொதித்தாலும் மானம் உள்ள அய்யா, எங்களுடன் கூட்டணி வருவீர்கள்.. மன்னித்து விடுகிறோம் என்ற வாசகங்களுடன் தவெகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • karnataka government secured for thug life movie release கமல்ஹாசனுக்கு பணிந்த கர்நாடக அரசு? தக் லைஃப்க்கு பச்சை கொடி!
  • Leave a Reply