ஊரடங்கு வேளையில் களைகட்டிய புறா பந்தயம் : ஏராளமான உள்ளூர் புறாக்கள் பங்கேற்பு!!

20 June 2021, 10:28 am
Pigeon Competition - Updatenews360
Quick Share

கோவை : புலியகுளம் அருகே பெரியார் நகரில் நடைபெற்ற புறா பந்தயத்தில் ஏராளமான புறாக்கள் பந்தயத்தல் பங்கேற்றன.

கொரோனா பாதுகாப்பு விதி முறையை பின்பற்றி கோயம்புத்தூர் புலியகுளம் புறா நண்பர்கள் சங்கம் சார்பாக பெரியார் நகரில் புறா பந்தயம் நடைபெற்றது. புறாக்கள் நெடு தூரம் வரை பறக்கும் திறனுடையதால் அவைகள் கடிதப் போக்குவரத்து மற்றும் தூது ஓலை அனுப்புவதற்கு முந்தைய காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன.

ஆனால் தற்போது இவ்வகை புறாக்கள் நன்கு பயிற்சிகொடுத்து புறா பந்தயத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பந்தயத்திற்க்காக பழக்கப்பட்ட புறாக்கள் வெகுதொலைவில் கொண்டுவிடப்பட்டு அவைகள் தங்கள் கூட்டுக்குத் திரும்பி வரும் நேரத்தை வைத்து போட்டிகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி இன்று காலை 7 மணிக்கு கோவை புலியகுளம் பெரியார் நகரில் கோயம்புத்தூர் புலியகுளம் புறா நண்பர்கள் சங்கம் சார்பாக 16 ஆம் ஆண்டிற்கான உள்ளூர் புறா பந்தயம் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற போட்டியில் 12 புறா போட்டியாளர்கள் கலந்து கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் புறாக்களை பறக்க விட்டனர். இதில் சரியான நேரத்தில் தங்களின் படல்களில் அமரும் புறாக்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என போட்டி ஒருங்கிணைப்பாளர்களான குட்டி, பாபு ஆகியோர் தெரிவித்தனர்.

மேலும் இந்த போட்டிகளுக்காக புறாக்களுக்கு தேவையான சத்தான உணவு பொருட்கள் வழங்கி சரியான முறையில் ஆண்டு முழுவதும் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 201

0

0