களைகட்டும் கோவை விழா: பொழுதுபோக்கு நிறைந்த சங்கமம் நிகழ்ச்சி…வாலாங்குளத்தில் குவிந்த மக்கள்..!!

Author: Rajesh
14 April 2022, 11:00 pm
Quick Share

கோவை: கோயம்புத்தூர் விழாவையொட்டி வாலாங்குளத்தில் சங்கமம் பொழுதுபோக்கு நிகழ்வு நடைபெற்றது.

கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக கோவையின் விருப்பமான உணவுகள், கைவினைப் பொருட்கள், குழந்தைகளுக்கான கைவினைப் பொருட்கள் மற்றும் கண்காட்சிகளின் சங்கமம் ஏப்ரல் 14 முதல் 17 வரை மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை  வாலாங்குளம்  பகுதியில் நடைபெறுகிறது.

கோயம்புத்தூரை சிறப்புகளை விவரிக்கும்  வகையில் கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட அற்புதமான செல்ஃபி ஸ்பாட்கள் இந்த பாதையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

கொரோனா காலத்திற்கு பின்பு கோவை மக்கள் குடும்பத்தினருடன் வெளியில் பொழுதை கழிக்க   இந்த சங்கமம் நிகழ்வு கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட செல்ஃபி ஸ்பாட்கள் உட்பட மற்றும் வாலாங்குளத்தில் வண்ண நீர் திரை  போன்ற அனைத்தும்  மறக்க முடியாத ஒன்றை வழங்குவதன் மூலம், சங்கமம் முழுவதுமே அனைவரின் இதயங்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது . சங்கமம் ஒரு வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு  நிறைந்த திருவிழாவாக அமைந்தது.

Views: - 482

0

0