கொரோனா வார்டில் களைகட்டிய பொங்கல் விழா : நோயாளிகள் பொங்கல் வைத்து கொண்டாட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 January 2022, 5:43 pm
Quick Share

கோவை: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை கொடிசியா மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் அங்கேயே பொங்கல் வைத்து கும்மியாடி பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

கோவை மாவட்டத்தில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. தினந்தோறும் தொற்று அதிகரித்து வருவதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நேற்று மாலை நிலவரப்படி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 5190 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை அளிக்கும் மையமாக கோவை கொடிசியா மையமும் உள்ளது. பொங்கல் பண்டிகை கூட வீட்டுக்கு செல்ல முடியாமல், நோயாளிகள் யாரும் மன உளைச்சல் அடைந்து விடக்கூடாது என்பதற்காக சுகாதாரத்துறை சார்பில் கொடிசியா மையத்திலேயே பொங்கல் பண்டிகை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கியாஸ் அடுப்பில் பொங்கல் வைத்த நோயாளிகள், பொங்கல் பானையை சுற்றி கும்மி பாட்டு பாடி பொங்கலை கொண்டாடினர்.

Views: - 144

0

0