வார இறுதியில் வாடிக்கையாளர்களை குளிர்வித்த தங்கம் விலை..! சவரனுக்கு ரூ.152 சரிவு..!

Author: Babu
3 October 2020, 11:26 am
gold rate 10- updatenews360- updatenews360
Quick Share

கடந்த 4 தினங்களாக ஏறு முகமாகவே இருந்து வந்த தங்கத்தின் விலை, வார இறுதியான இன்று சற்று சரிந்துள்ளது.

நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.

இதற்கிடையே கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை அதிகரித்துள்ளனர். இதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறியும், இறங்கியும் வாடிக்கையாளர்களிடம் கண்ணாம் பூச்சி விளையாடி வருகிறது

கடந்த வாரம் முழுவதும் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்த தங்கம் விலை, இந்த வாரம் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருவது வாடிக்கையாளர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

இன்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.38,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.19அதிகரித்து ரூ.4,850-க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.64.70க்கு விற்பனை ஆகிறது.

Views: - 43

0

0