சிகிச்சை பெறுவதற்காக நடிகை சமந்தா வெளிநாடு செல்ல இருப்பதாக வெளியாகியுள்ள தகவலால், அவருக்கு என்ன ஆச்சோ, என்று அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
10 ஆண்டுகளைக் கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. விஜய், சூர்யா உள்ளிட்ட கோலிவுட் நடிகர்களுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதேபோல, புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ எனும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி டோலிவுட்டையும் தனது ரசிகர்கள் பட்டியலில் சேர்த்து விட்டார்.
இவரும் நடிகை நயன்தாராவை போலவே, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதற்கேற்றாற் போல, சகுந்தலம் மற்றும் யாசோதா ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது விஜய தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தியிலும் நடிக்க உள்ளார்.
பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருமம் சமந்தாவுக்கு சரும பிரச்னை இருந்து வந்தது. பாலிமார்பஸ் லைட் எரப்ஷன்’ என்ற தோல் நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிக வெளிச்சத்தில் நடித்ததால் அலர்ஜி ஏற்பட்டதாகக் கூறியிருந்தார். இதன் காரணமாக ‘அஞ்சான்’ படப்பிடிப்பின்போதும் அவர் வெளிநாடு சென்று சிகிச்சைப் பெற்று வந்தார்.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் சமந்தா, தோல் பிரச்சனை காரணமாகத்தான் அண்மை காலமாக இவரது எந்த போட்டோஷுட்டும் வெளியாகவில்லை. இடையில் யசோதா டீசர் குறித்த அறிவிப்பை மேற்கொண்டார்.
இந்த நிலையில், சமந்தா கடுமையான உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார், மேலும் அவர் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். சூரிய ஒளியால் ஏற்படும் தோல் நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவர் ஓய்வில் இருப்பதாகவும், மருத்துவர்களின் ஆலோசனைக்கு பிறகு, பொது வெளியில் தோன்றுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது.
இருப்பினும், இது தொடர்பாக அவரது தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.