என்னது விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா கல்யாணம் செய்ய இந்த நடிகை தான் காரணமா? வெளியான உண்மை!!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2022, 4:52 pm
Vignesh Shivan and Nayan - Updatenews360
Quick Share

பல வருடங்களாக ஜோடியாக ஊர் ஊராக சுற்றி வந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா கடந்த 9ம் தேதி திருமணம் செய்தனர். பலரும் இவரது திருமணத்தை வாழ்த்தி வருகின்றனர்.

Nayanthara & Vignesh Shivan wedding: Invitation card, date, venue, guest  list and more details | PINKVILLA

ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நயன்தாரா. ஆரம்பத்தில் நயன்தாரா தனது தனிப்பட்ட வாழ்க்கையை தவிரித்து விமர்சனங்களை எதிர்த்து தனது கேரியரில் கவனம் செலுத்தி டாப் நடிகையாக வந்தார்.

Vignesh Shivan shares a romantic pic with Nayanthara, Says 'life after  meeting you has been blessed' | PINKVILLA

வாழ்வில் எத்தனை விரிசல் விழுந்தாலும் அதையெல்லாம் தூக்கி எறிந்து மீண்டும் சினிமாவில் சாதித்து காட்டிய அவர், தனித்துவ நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்றார்.

Nayanthara launches her own skincare brand 'The Lip Balm Company' |  NewsBytes

போடா போடி படம் மூலம் இயக்குநரானவர் விக்னேஷ் சிவன். இவருக்கும் நயன்தாராவுக்கு என்ன சம்மந்தம்.. எப்படி இவர்களுக்குள தொடர்பு ஏற்பட்டது என்பதற்கெல்லாம் விடை நடிகை சமந்தா தான்.

South Stream: Vijay Sethupathi's Naanum Rowdy Dhaan | Entertainment  News,The Indian Express

2012ல் வெளியான போடா போடி படத்திற்கு பின்பு வாய்ப்புக்காக மிகவும் கஷ்டப்பட்டவர் விக்னேஷ் சிவன். பின்னர் நானும் ரௌடி தான் படத்தை எடுக்க முடிவு செய்த அவர், முதலில் அனிருத் மற்றும் சமந்தாவை வைத்து இந்த படத்தை இயக்க நினைத்தார்.

Trending news: Samantha Ruth once used to live on bread, today there is no  dearth of fame - Hindustan News Hub

ஆனால் அனிருத், படத்திற்கு இசையமைக்கிறேன், நடிப்பு வேண்டாம் என சொல்லிவிட்டார். பின்னர் கதாநாயகர்களுக்காக அலைந்த அவர், அசோக் செல்வன் உட்பட பல பிரபலங்களை அணுகினார். ஆனால் அவர்களெல்லாம் நோ சொல்ல, ஒகே சொன்னார் விஜய் சேதுபதி.

Breaking! Samantha and Anirudh sign a romantic film? - Tamil News -  IndiaGlitz.com

ஹீரோ கிடைத்தது தாமதம் தான் என்றாலும், கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட சமந்தாவோ, இவ்ளோ நாள் வெயிட் பண்ணிட்டே சாரி இனி இந்த படத்துல நடிக்க முடியாது என செல்லமாக கூறிவிட்டாராம்.

விஜய் சேதுபதியுடன் நடிக்க வைக்க கதாநாயகியை தேடிய போதுதான், நயன்தாராவை சந்தித்து கதையை ஓகே செய்தாராம்.. கதையை மட்டுமல்ல வாழ்க்கையும் அவருடன் தான் என விதி எழுதிவிட்டது போல.

இப்படி மலர்ந்ததுதான் இவர்களது காதல். தற்போது கல்யாணம் ஆன இருவரும், இனி படங்களில் தொடர்ந்து நடிப்போம். உங்களின் ஆதரவு எங்களுக்கு தேவை என கூறியுள்ளனர்.

Views: - 734

1

0