தூத்துக்குடி மக்களுக்கு என்ன செஞ்சீங்க? ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? கனிமொழிக்கு அமைச்சர் சவால்!!

24 January 2021, 4:17 pm
Kanimozhi Minister - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து எந்தப் பிரச்சனை வந்தாலும் முதல் ஆளாக குரல் கொடுப்பது அதிமுக அரசுதான் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

தூத்துக்குடி அடுத்த மேல தட்டப்பாறை வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயங்கள் இன்று நடைபெற்றது மாட்டு வண்டி பந்தயத்தை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இதில் பெரிய மாட்டு வண்டி சிறிய மாட்டு வண்டி என்ற வகையில் நடைபெற்ற இப்போட்டியில் மொத்தம் 20 க்கும் மேற்பட்ட ஜோடி காளைகள் பங்கேற்றன இதில் முதல் பரிசாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வின் காளைகளும், இரண்டாவது பரிசு வேலாங்குளம் பகுதியைச் சார்ந்த காளைகளும், மூன்றாம் பரிசு குமரெட்டியாபுரம் காளைகளும் வெற்றி பெற்றன.

இதன் பின்னர் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில், மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து எந்தப் பிரச்சனை வந்தாலும் முதல் ஆளாக குரல் கொடுப்பது அதிமுக அரசுதான் என்ற அவர், இதை அரசியல் பிரச்சினையாக பார்க்க கூடாது இது சர்வதேச பிரச்சனை இது இந்தியா பிரச்சினை மட்டுமல்ல உலகளாவிய பிரச்சினையாகவும் உள்ளது என்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மியான்மரில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை 24 மணி நேரத்தில் மீட்டுக் கொண்டு வந்தது அதிமுக அரசுதான் என்றார். ஆனால் தற்போது நடைபெற்ற ராமேஸ்வரம் சம்பவம் துரதிருஷ்டவசமான சம்பவம் இது கண்டிக்கத்தக்கது இதுகுறித்து தமிழக முதல்வரும் கண்டனம் தெரிவித்துள்ளார் என்றார்.

அண்மையில் பெய்த கனமழை தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர்,இதுகுறித்து டெல்லி சென்ற தமிழக முதல்வர் பிரதமரிடம் பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு நிவாரணம் வழங்குவதாக கூறியுள்ளது மழைநீர் விவசாய நிலங்களில் வடிந்த பின்பு துல்லியமாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

இன்னும் மூன்று மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என கனிமொழி கூறி வருவது குறித்து கேட்டதற்கு கனிமொழி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது இரண்டு ஆண்டுகள் அவர் என்ன செய்துள்ளார் என கேள்வி எழுப்பினார்.

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினராக தான் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கியுள்ளேன். ஆனால் கனிமொழி எம்பி இரண்டு ஆண்டுகளில் கோவில்பட்டி பகுதிக்கு என்னென்ன நலத் திட்டங்களை கொண்டு வந்தார் என ஒரே மேடையில் விவாதிக்க தான் தயாராக இருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் எம்பி செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் தான் செய்து இருப்பதாக குறிப்பிட்ட அவர் கனிமொழி என்ன செய்தார் என கேள்வி எழுப்பினார்.

கோவில்பட்டி தீப்பெட்டி தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க கனிமொழி எம்பி எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்ட அவர், கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்களை டெல்லிக்கு அழைத்து சென்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து 18 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி 12 சதவீதமாக குறைத்ததாக குறிப்பிட்டார். நாங்கள் என்ன பணி செய்திருக்கிறோம் என்பது மக்களுக்கு தெரியும் என்றார்.

தாமிரபரணியையும், வைப்பாரையும் இணைக்கும் திட்டத்திற்கு விரைவில் அரசாணை வெளியிடப்பட்ட பின்பு முதல்வர் அடிக்கல் நாட்டுவார் என்றார். இதன் மூலம் கடலில் வீணாக கலக்கும் தண்ணீர் கல்லாறு, உப்பாறு போன்ற பகுதிகளில் நீர் வரத்து கிடைக்கப்பெற்று தூத்துக்குடி மாநகரில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தடுக்கப்படும் என்றார்.

Views: - 0

0

0