திண்டுக்கல், துரைராஜ் நகர் 2வது தெருவில் வசிக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகள் இந்திராணி வசிக்கும் வள்ளலார் நகர், மகனும் பழநி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஐ.பி.செந்தில்குமார் வீடு, அவர்களுக்கு சொந்தமான ஸ்பின்னிங் மில்கள், மற்றும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எம்.எல்.ஏ. விடுதி உள்ளிட்ட 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அமைச்சரின் மகள் மற்றும் மகன் வீடுகளில் நேற்றும் சோதனை தொடர்ந்து நடைபெற்றது. சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.
இந்த நிலையில் அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் முறைகேடாக சொத்து குவித்தல் தொடர்பான வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் விசாரணை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் உள்ள பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், சொத்து மற்றும் முதலீடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த சோதனைகள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் சொத்து குவிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான விசாரணை தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.