கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எப்போது? அமைச்சர் கே.பி அன்பழகன் தகவல்!!
21 January 2021, 11:35 amகல்லூரி முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு எப்போது என அமைச்சர் கே.பி அன்பழகன் முக்கிய தகவலை கூறியுள்ளார்.
கொரோனா முடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் பொழுதுபோக்கு கூடங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் மூடப்பட்டன.
பின்னர் கொரோனா நோய் தொற்று தாக்கம் மெல்ல குறைந்தன. இதையடுத்து ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு தொழிற்சாலைகள் முதல் அனைத்து நிறுவனங்கள் திறக்கப்ப்டடன. பின்னர் மக்கள் பயன்பாட்டிற்காக திரையரங்குகளும் திறக்கப்பட்டன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பாடம் கற்றனர். பின்னர் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
தற்போது மூன்றாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், முதலாமாண்டு மற்றும இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அமைச்சர் கேபி அன்பழகன் கூறியுள்ளார்.
இன்னும் 2 நாட்களில் இது குறித்து முறையான அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்த அமைச்சர், ஒரு வகுப்பறையில் 30 மாணவர்களை மட்டும் அமர வைக்கவும், ஷிப்ட் முறையில் வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
0
0