‘பிரசவத்தின் போது உயிரிழந்த குழந்தை’ :மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…!

5 July 2021, 7:32 pm
Quick Share

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியமே என புகார் தெரிவித்து உறவினர்கள் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

ஈரோடு சம்பத் நகர் பகுதியில் கணேசன் என்பவர் தனது மனைவி ரமணி என்பவருடன் வசித்து வருகிறார். ரமணியின் பிரசவத்திற்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் கடந்த 4ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சுகப்பிரசவம் ஆக இருந்த நிலையில், இன்று அதிகாலை வயிற்றில் இருந்த குழந்தையிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறி மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்கவேண்டும் என்று கூறி உள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு குழந்தை உயிரிழந்ததாக கூறியதாக கணேசன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, கணேசன் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Views: - 146

0

0