எங்க தலைவரை பத்தி பேசுனது தப்பு… உடனே அவர கைது செய்யுங்க : சீமான் உருவபொம்மையை எரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2022, 7:20 pm
Congress Protest - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவதூறாக பேசியதாக கூறி சீமானின் உருவ பொம்மையை காங்கிரஸ் கட்சியினர் எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது : முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி பேசும்போது ராஜீவ்காந்தி தியாகி ஒன்றும் இல்லை, அவர் ஊழல் செய்தவர். இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்களை கொன்றவர், என்பது உள்ளிட்ட கருத்துக்களை கூறியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திண்டுக்கல் மாநகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மணிகண்டன் தலைமையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சீமானின் உருவ பொம்மையை காங்கிரஸ் கட்சியினர் எரித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் உருவ பொம்மையை பறிக்க முயன்ற போது சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேருந்துகள் வந்து செல்லும் போக்குவரத்து நெரிசலான சாலையில் உருவ பொம்மைய எரித்தபோது காவலர்கள் விரைந்து வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இந்த உருவபொம்மை எரிப்பு சம்பவம் காரணமாக பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 384

0

0