சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதி எது? உதயநிதி ஸ்டாலின் பதில் !!

12 November 2020, 2:11 pm
Udhayanithi Stalin - Updatenews360
Quick Share

ஈரோடு : வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதி குறித்து தலைமைதான் முடிவு செய்யும் என திமுக இளைரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானியில் திமுக மாநில மாணவரணி துணை செயலாளர் ரங்கசாமி உடல்நலக்குறைக் குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது உருவப்படத்தை திறந்து வைக்க திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கலந்துகொண்டார்.

பின்னர் ரங்கசாமியின் உருவப்படத்தை உதயியநி ஸ்டாலின் திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நடிகர் விஜய்யின் தந்தை ஆரம்பித்த கட்சியுடன் கூட்டணி வைக்கப்படுமா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த உதயநிதி, அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என கூறினார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதி என்ன என்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், தலைமைதான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

Views: - 18

0

0