பாவம், பரிதாபப்பட்டு பைக்கில் லிப்ட் கொடுப்பவரா நீங்கள்? ஒரு எச்சரிக்கைப் பதிவு!!

23 January 2021, 10:34 am
bike Left- Updatenews360
Quick Share

திருப்பூர் : இருசக்கர வாகன ஓட்டிகளில் லிப்ட் கேட்பது போல் நடித்து ரூ.64 ஆயிரம் மதிப்பிலான நகை மற்றும் செல்போன் திருட்டில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரை சேர்ந்தவர் மதியழகன். நகை அடகு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், மருத்துவரை பார்ப்பதற்காக பெருமாநல்லூரில் இருந்து குன்னத்தூர் செல்லும் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மர்மநபர்கள் இவரிடம் வண்டியில் செல்வதற்கு லிப்ட் கேட்பது போல் நிறுத்தி உள்ளனர். மதியழகன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியதும், மர்மநபர்கள் மதியழகனை மிரட்டி அவர் அணிந்திருந்த ஒன்றரை சவரன் நகை, 14 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

இது தொடர்பாக மதியழகன் பெருமாநல்லூர் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட பெருமாநல்லூர் போலீசார், குன்னத்தூர் பகுதியை சேர்ந்த தவசி, மதுரையை சேர்ந்த வாசிம்ராஜா, இம்ரான்கான் உசைன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 64 ஆயிரம் மதிப்பிலான நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

Views: - 9

0

0