“பிக்பாஸ் சீசன் – 6.. நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது கமலா.? சிம்புவா.? வெளியான தகவல்.!

Author: Rajesh
23 May 2022, 4:48 pm
Quick Share

நடிகர் கமல்ஹாசன் இதுவரை 5 பிக்பாஸ் சீசன்கள் நடத்தி முடித்துள்ளார். ஆரவ், ரித்விகா, முகின். ஆரி மற்றும் ராஜூ ஆகியோர் இதுவரை டைட்டில் வின்னர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதன் 6ஆவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் தொடக்கத்தில் இந்த சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸைத் தொடர்ந்து ஓடிடியில் மட்டும் வெளியான பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். ஆனால் சில நாட்களிலேயே, கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் கமல் அதைத் தொடர முடியவில்லை.

இதையடுத்து நடிகர் சிம்பு அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். கமலைப் பொறுத்தவரை பல படங்களில் தற்போது பிசியாக உள்ளார். மற்றொரு புறம் அரசியலிலும் தீவிரம் காட்டிவருகிறார். இதனால் பிக்பாஸ் 6ஆவது சீசனை அவர் தொகுத்து வழங்குவரா எனும் கேள்வி எழுந்துள்ளது.

அவர் கலந்துகொள்ளாத பட்சத்தில் இதனையும் சிம்புவே தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தமிழ் சினிமாவில் சிம்பு, குறிப்பிட்;ட நாட்களில் படத்தை முடித்து கொடுக்க மாட்டார், குறித்த நேரத்தில் படப்பிடிப்பிற்கு வர மாட்டார் போன்ற பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. தற்போது தான் மாநாடு வெற்றி படத்திற்கு பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்தால் தான் சிம்புவிற்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் இருப்பதாகவே சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடத்தொடங்கியுள்ளது. அதனால் சிம்பு நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்துவார் என்றும் கூறப்படுகிறது. என இருவரையும் தாண்டி வேறு யாரேனும் வருவார்கள் என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன.

Views: - 722

0

2