“நடிகர் விஜய் அல்ல யார் வந்தாலும் புரட்சி தலைவர் இடத்தை நிரப்ப முடியாது” – அமைச்சர் ஜெயகுமார் பேட்டி..!

5 September 2020, 1:35 pm
Quick Share

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இடங்களை யாராலும் நிரப்ப முடியாது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் மற்றும் சங்கீதா தம்பதிகளின் திருமனநாள் கொண்டாடப்பட்டது. அப்போது விஜயின் தீவிர ரசிகர்கள் ஏராளமானோர் சமூக வலைதளப்பக்கங்களில் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டுகளை தெறிக்கவிட்டனர்.

அதில் ஒரு ரசிகர், ஒருபடி மேல் சென்று நடிகர் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோரை மறைந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர்போல் சித்தரித்து கட்டவுட் வைத்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் தீயாய் பரவியது. இது குறித்து அமைச்சர் ஜெயகுமாரிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர் அப்போது பேசிய அவர், புரட்சித்தலைவர் என்றால் அது எம்.ஜி.ஆர் தான், புரட்சித்தலைவி என்றால் அது ஜெயலலிதா மட்டும்தான். அவர்கள் இடத்தை யாராலும் இனி நிரப்ப முடியாது என தெரிவித்தார்.

மேலும், பாஜக, அதிமுக கூட்டணி குறித்து கேட்டபோது, அதிமுக எப்போதுமே கூட்டணி தர்மத்தை கடைபிடித்து வருவதாக கூறினார். கூட்டணியில் இருந்து கொண்டு கூறப்படும் விமர்சனங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என தெரிவித்த ஜெயக்குமார், அமைச்சர்களாகிய எங்களை பேசாமல் இருக்க வேண்டும் என்று பாஜகவினர் கூற முடியாது எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Views: - 0

0

0