இந்தப் படத்துல ஏன் நடிச்சனு இப்ப Feel பண்ற.. உண்மையை போட்டுடைத்த குஷ்பு : அதுவும் சூப்பர் ஸ்டார் படத்த பத்தி இப்படியா பேசறது!!

Author: Udayachandran RadhaKrishnan
29 June 2022, 6:06 pm
Kushboo - Updatenews360
Quick Share

சினிமா வரலாற்றிலேயே அதிக ரசிகர்கள் கொண்ட நடிகையாக திகழ்ந்தவர், நடிகைக்காக கோவிலே கட்டப்பட்ட என்ற பெருமை எல்லாம் நடிகை குஷ்புவுக்கே சொந்தம்.

தனது படங்களில் நடிப்பு, நடனம், கிளாமர் என அனைத்திலும் பட்டையை கிளப்பி தமிழ் சினிமாவை தன்வசம் வைத்திருந்தவர் நடிகை குஷ்பு. அதுமட்டுமின்றி, தமிழ் சினிமா இயக்குநரான சுந்தர் சியுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து தமிழகத்தின் மருமகளாக வலம் வருகிறார்.

தற்போது அரசியலில் நுழைந்தாலும், சினிமாவிலும் தனி கவனம் செலுத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற காட்சிகள் வைரலாகி வருகிறது.

அதில், தொகுப்பாளினி கேள்விக்கு பதிலளிக்கும் குஷ்பு, இந்த படத்தில் ஏன்தான் நடித்தோம் என உணர்ந்த படம் எது என்று கேட்க, டக்கென்று தனது குருவான எஸ்பி முத்துராமன் அவர்கள் இயக்கிய பாண்டியன் படத்தை தான் கூறுவேன்.

அந்த படத்தல் குட்டை Skirt அணிந்து ஆடியதை தற்போது பார்த்தாலும் ரொம்ப மோசமாக நடித்துள்ளதாக உணர்ந்தேன் என ஓபனாக கூறியுள்ளார்.

Views: - 147

1

0