சென்னையில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்தும் பணி தொடங்கியுள்ள நிலையில், பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் அடையார் ஆற்றங்கரை பகுதி மக்கள் கடும் எதிர்ப்புக்கு நடுவில் இந்த பணி நடந்து வருகிறது.
குறிப்பாக அனகாபுத்தூரில் உள்ள டோபிகானா, தாய் மூகாம்பிகை நகர் சாந்தி நகர், காயிதே மில்லத் நகர், ஸ்டாலின் நகர், எம்ஜிஆர் நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு பகுதிகளை இடிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்க: காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்… பாமக பிரமுகர் கைது!!
நீர்ப்பிடிப்பு பகுதியில் சுமார் 593 வீடுகள் இருப்பதால், அங்கு வசிப்பவர்களை அப்புறப்படத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கடந்த 6 நாட்களாக ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.
450க்கும் மேற்பட்ட வீடுகள் தற்போது வரை இடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வசித்தவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு சார்பில் கீழ்ப்பாக்கம்,பெரும்பாக்கம் பகுதிகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அனகாபுத்தூர் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அம்மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் களமிறங்கியுள்ளனர்.
விசிக தலைவர் திருமாவளவன், குடியிருப்புகளை அப்புறப்படுத்தாமல் மக்கள் அங்கேயே வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை செயலாளரை சந்திக்க உள்ளதாக கூறினார்.
இந்தநிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டி இருக்கும் காசா கிராண்ட் மற்றும் மாதா பொறியியல் கல்லூரி கட்டிடங்களை இடிக்க தமிழக அரசுக்கு தயக்கம் ஏன்? ஏழைகளுக்கு எதிராக புல்டோசர்களை நிறுத்தும் அரசு பணக்காரர்களைக் கண்டால் பதுங்கி கிடப்பது ஏன்? என குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.