நடிகர் சிவகார்த்திகேயனுடன் பிரச்சனை ஏன்? யானை பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் ஓபனாக பேசிய நடிகர் அருண் விஜய்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 June 2022, 5:39 pm
Arun Vijay - Updatenews360
Quick Share

கோவை பந்தயசாலை பகுதியில் அமைந்துள்ள தனியார் திரையரங்கில் கே.ஜி.சினிமாஸ் யானை திரைப்படத்தின் ப்ரீ ப்ரோமோசன் நடைபெற்றது. இதில் நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குனர் ஹரி ஆகியோர் வந்திருந்தனர். முன்னதாக திரையரங்கில் யானை திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். முன்னதாக பேசிய நடிகர் அருண் விஜய், யானை படத்தின் ப்ரோமசன் கோவையில் தொடங்கியிருக்கிறோம். ஹரி சாருடன் நீண்டநாள் காத்திருப்பு இப்போது நடந்துள்ளது.

குடும்ப திரைப்படமாக வெளியாக உள்ளது. ஹரி சாரின் வழக்கமான ஸ்பீடு இந்த படத்திலும் இருக்கிறது. ரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கில் என்னுடைய படம் வெளியாகிறது. கதைக்களம் தென்பகுதியை சார்ந்து நடப்பதால் மாவட்டங்களில் இருந்து ப்ரோமசன் தொடங்கி இருக்கிறோம்.

அரசியலில் வரும் எண்ணமில்லை, என்னுடைய தொழில் சினிமா அதில் முன்னேற பயணிப்பேன் என்றார். அதேபோன்று சினிமா ஆசைகள் இருப்பவர்கள் யாரும் வரக்கூடாது என்பதுமில்லை. உடல் கட்டமைப்பு எனக்கு ரெம்ப பிடிக்கும் இளைஞர்களுக்கு பிடிக்கிறது. அதை நான் கடைப்பிடிக்கிறேன்.

எனக்கும் சிவகார்த்திகேயன் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. 25 வருசமா சினிமாவில் இருக்கிறேன் என்னுடைய பாதை வேறு அவருடைய பாதை வேறு எனவும் எல்லாரும் சமம். இரசிகர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பை வெளிப்படுத்தி கொள்வதே நல்லது என தெரிவித்தார்.

பின்னர் இயக்குனர் ஹரி அளித்த பேட்டியில், உணர்ச்சிவசப்பட்ட திரைப்படமாக வந்துள்ளது. குடும்ப ஆடியன்ஸ் அனைவருக்கும் பிடிக்கும் எனவும் நல்ல கதையா வந்துள்ளது என கூறினார்.

படத்தன் பாடல்களும் நன்றாக அமைந்துள்ளது. மக்கள் திரையரங்குகளுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. கதைக்கு ஏற்ற திரைக்கதை பன்னுவதே என்னுடய் பாணி. யானை பான் இந்தியா மூவி மாதிரி இல்லை, அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது.

சூர்யாவிடம் சீக்கிரம் படம் பண்ணிறலாம் என தெரிவித்த இயக்குநர் ஹரி, யானையின் குணாதிசயம் ஹீரோவிற்கு இருப்பதால் யானை என டைட்டில் வைத்திருக்கிறோம்.
சினிமாவிற்கு வரவேற்பு குறையவில்லை. ஒரே நாளில் நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் படம் வெளியாகிறது. பாட்டன் மாறுகிறது எனவும் ஒருவாரம் கழித்து படம் பார்க்க யாரும் விரும்பவில்லை. திரையரங்குகளில் கூட்டத்தை பார்த்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. பழைய காலத்திற்கு சென்றது போன்று உள்ளது.

விக்ரம் திரைப்படம் நல்லாயிருக்கிறது என விமர்சனம் வருகிறது. பட குழுவிற்கு வாழ்த்துகள் எனவும் இன்று இரவு படத்தை பார்க்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

Views: - 705

3

2