மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட கணவன்: கொலை செய்து நாடகமாடிய மனைவி கைது

12 July 2021, 8:56 pm
Quick Share

மதுரை: மதுரையில் மது அருந்திவிட்டு வந்து தகராறில் ஈடுபட்ட கணவரை கொலை செய்து இயற்கை மரணம் என நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

மதுரை ஐராவதநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் தனபாண்டியன். இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் , தூக்கத்திலேயே தன்பாண்டியன் இறந்துவிட்டதாக தனலட்சுமி ஞாயிற்றுக்கிழமை அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று தன்பாண்டியனின் சடலத்தை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், தனபாண்டியன் இயற்கையாக இறக்கவில்லை என்றும், கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளனர்.

பொய்யான தகவலைக் கூறிய தனலட்சுமியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், தனபாண்டியன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டதால் , ஆத்திரமடைந்த தனலட்சுமி கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதையடுத்து , தெப்பக்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து தனலட்சுமியை கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர் . இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Views: - 194

0

0