கணவன் தலையை உடைத்த மனைவி : பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பியோட்டம்!!

30 October 2020, 5:11 pm
wife beat Husband - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : நாகர்கோவில் அருகே பொதுமக்கள் முன்னிலையில் கணவனை அடியாட்களுடன் வந்து பாட்டிலால் தாக்கி மனைவி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அலெக்ஸ்சாண்டர் பிரஸ் ரோட்டில் அன்பு புரூட் ஸ்டால் நடத்தி வருபவர் அன்பு. மனைவி மோனிக்காவுக்கும் கணவன் அன்புவை பிடிக்கவில்லை என்று காரணம் கூறப்படுகிறது.

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 12வருடங்கள் ஆகிய நிலையில் கணவன் அன்புவை பிடிக்கவில்லை என்று கூறி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற மனைவி மோனிகா அடிக்கடி கணவர் அன்புவின் பெற்றோரிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.

இது குறித்த புகார் வடசேரி காவல் நிலையத்தில் உள்ள நிலையில் மீண்டும் அடிஆட்களுடன் வந்த மோனிகா, கடையில் இருந்த சர்பத் பாட்டிலை எடுத்து கணவர் தலையில் அடித்துவிட்டு அங்கிருந்த தப்பியோடினார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு அழைத்தனர். உடனே வந்த ஆம்புலன்ஸ், அன்புவுக்கு முதலுதவி செய்து மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்து சென்றனர். கணவன் மீது மனைவி கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 21

0

0