கணவன் கண்முன்னே மனைவி துடித்துடித்து பலி : அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய பெண்.. நெஞ்சை உலுக்கும் காட்சிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 September 2022, 5:47 pm
Bus Two Wheeler Accident - Updatenews360
Quick Share

பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் குமரன் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே திசையில் இருசக்கரவாகனத்தில் கணவன் மனைவி இருவரும் பழைய பேரூந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாரத விதமாக அரசு பஸ் மோதியதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்ற பெண் அரசு பஸ்ஸின் சக்கரத்தில் விழுந்தார். இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த அவரது கணவன் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் சாலையில் விழுந்தார். சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கணவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார், அரசு பஸ் ஓட்டுனர் முத்துமாணிக்கத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் வடக்கு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து தொடர்பான பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Views: - 659

0

0