சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே மேவலூர் குப்பத்தில் பிரியாணி கடை நடத்தி வருபவர் அரி கிருஷ்ணன். இவரது மனைவி பவானி (39), கடையில் உதவியாக பணியாற்றினார்.
இந்நிலையில், கடையில் வேலை செய்த மதன்குமார் (29) என்பவருடன் பவானிக்கு ஏற்பட்ட பழக்கம், கள்ளக்காதலாக மாறியது. அரி கிருஷ்ணன் இல்லாத நேரத்தில் இருவரும் நெருக்கமாக இருந்தது, கண்காணிப்பு கேமரா மூலம் அவருக்கு தெரியவந்தது.
ஆத்திரமடைந்த அரி, மதனை வேலையிலிருந்து நீக்கினார்.இதனால் ஆத்திரமடைந்த பவானியும், மதனும், அரியை கொலை செய்ய முடிவு செய்து, திருவாரூரைச் சேர்ந்த கூலிப்படையை அணுகினர். 15 லட்ச ரூபாய் பேரத்தில் 2 லட்ச ரூபாய் முன்பணமாக கொடுத்தனர்.
இதன்படி, சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் அரி மோட்டார் சைக்கிளில் செல்லும்போது, கூலிப்படையினர் காரால் மோதி கொல்ல முயன்றனர். ஆனால், அரி உயிர் தப்பினார்.பின்னர், கூலிப்படையினர் அரியை தொடர்பு கொண்டு, “உன் மனைவியும் கள்ளக்காதலனும் உன்னைக் கொல்ல 15 லட்சம் பேரம் பேசியுள்ளனர். 5 லட்சம் கொடுத்தால் உன்னை விடுவிக்கிறோம்” என மிரட்டினர்.
பயந்து போன அரி, 1.65 லட்சம் ரூபாய் கொடுத்தார். பின்னர், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து, பவானி, மதன்குமார் மற்றும் கூலிப்படையினரான விக்னேஷ், விஜய், மணிகண்டன் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.