குடும்பத் தகராறால் கிணற்றில் குதித்த மனைவி : காப்பாற்ற சென்ற கணவனும் பலியான பரிதாபம்!!

8 May 2021, 10:26 am
Well couple Suicide- Updatenews360
Quick Share

தேனி : ஆண்டிப்பட்டி அருகே கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மனைவியை காப்பாற்ற சென்ற கணவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி ஆண்டிப்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டியை சேர்ந்த சசிக்குமார் மற்றும் அவரது மனைவி அழகுராணிக்கும் அடிக்கடி குடும்ப சண்டை ஏற்படுவது வழக்கம்.

இந்த நிலையில் மீண்டும் கணவருடன் சண்டை போட்டு தனது தாய் வீட்டுக்கு அழகு ராணி சென்றுள்ளார். மனம் தாங்காத கணவர் சசிக்குமார், அழகு ராணி வீட்டிற்கு சென்று மீண்டும் சண்டையிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அழகுராணி தாய் வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்காலைக்கு முயற்சி செய்துள்ளார். கண்ணெதிரே மனைவி தற்கொலை செய்வதை பார்த்த கணவனும் கிணற்றில் குதித்துள்ளான்.

இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் கணவன் மனைவி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சண்டையிட்ட தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 136

0

0