குடிபோதையில் தினமும் தகராறு : பொங்கியெழுந்த காதல் மனைவி.. கண்டம் துண்டமாக கணவனை வெட்டிய கொடூரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2021, 3:21 pm
Wife Surrender -Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : கணவனின் கொடுமையை தாங்க முடியாமல் வெகுண்டெழுந்த மனைவி தன் கணவனை கறி வெட்டும் கத்தியால் கண்டம் துண்டமாக வெட்டிப் பகொலை செய்து காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் 3 வது வார்டு மளிகை செட்டி தெருவை சேர்ந்தவர் காஜா (வயது 65). இவருடைய மனைவி தில்ஷாத் (வயது 60). இவர்களுக்கு சலீம் , அசரப் அலி, நவ்ஷாத், இம்ரான் என நான்கு மகன்கள் இருந்தனர்.

இதில் ஏற்கனவே அசரப் அலி , இம்ரான் ஆகிய இருவரும் வெவ்வேறு காரணங்களால் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார்கள். காஜா மற்றும் தில்ஷாத் ஆகிய இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் கலவை என்னும் ஊரில் வசதியுடன் வாழ்ந்து வரும் மூத்த மகன் சலீம் உடன் இருந்து வருகின்றனர்.

காஜாவின் 3 வது மகன் நவ்ஷாத் (வயது 35) சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார். இவர் சிவிஎம் நகரில் ரேவதி என்ற இந்து பெண்ணை காதலித்து காதலியை இஸ்லாம் மதத்துக்கு மாற்றி 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

மனைவி பெயர் ரஷியா (வயது 29). இவர்களுக்கு பைரோஸ் என்ற 9 வயது மகளும் பைசல் என்ற 6 வயது மகனும் உள்ளனர். இரண்டு பிள்ளைகளும் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். மதுபோதைக்கு அடிமையான நவ்ஷாத் அவ்வப்போது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம்.

நவ்ஷாத் தொழுகை செய்யும் ஜமாத்தில் பல முறை மனைவியுடன் சேர்ந்து வாழ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு சுமார் 11 மணி அளவில் எப்போதும் போல் நவ்ஷாத் குடித்துவிட்டு ரஷியாவிடம் தகராறு செய்துள்ளார்.

மேலும் அருகில் கிடந்த கறி வெட்டும் கத்தியை எடுத்து ரஷியாவை விரட்டி விரட்டி நவ்ஷாத் வெட்ட முயன்றார். பாதுகாப்புக்காக கழிவறையில் சென்று ஒளிந்து கொண்ட ரஷியா ஒரு கட்டத்தில் வெகுண்டெழுந்து நவ்ஷாத்தை கீழே தள்ளி கறி வெட்டும் கத்தியை எடுத்து ஆத்திரம் அடங்கும்வரை கண்டந்துண்டமாக வெட்டி படுகொலை செய்தார்.

நவ்சாத்தின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ரத்தக் கறையுடன் பத்திரகாளி போலிருந்த ரஷியாவை பார்த்து அதிர்ந்து போயினர். ரஷியா அங்கிருந்து வேகமாக நடந்து வந்து சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

சம்பவ அறிந்து கொண்ட சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மளிகை செட்டி தெருவுக்கு விரைந்து சென்று ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்த நவ்சாத்தின் சடலத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

நவ்ஷாத்தை கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை சிவகாஞ்சி காவல்துறையினர் கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு சென்றனர். சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சரணடைந்த ரஷ்யாவை கைது செய்து பாதுகாப்புடன் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கணவனின் கொடுமையை தாங்க முடியாமல் வெகுண்டெழுந்த மனைவி தன் கணவனை கறி வெட்டும் கத்தியால் கண்டம் துண்டமாக வெட்டிப் படுகொலை செய்த செயல் காஞ்சிபுரம் நகரையே அதிர செய்தது.

சமீபகாலமாக போதைக்கு அடிமையாகும் கணவன்மார்களை மனைவிமார்கள் அடிப்பதும் டைவர்ஸ் வாங்குவதும் கொலை செய்வதும் அதிகரிப்பதாக ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இது போன்ற செயல்கள் அதிகரிக்கும் முன்னர் அமைதியான வாழ்க்கை வாழ போதிய விழிப்புணர்வை மக்களிடம் உண்டாக்குவது அரசின் கடமையாகும்.

Views: - 297

0

0