கரும்பு தின்னது குத்தமா? அரிவாளை காட்டி மிரட்டிய போலீஸ்காரர் மனைவி!!

18 January 2021, 2:54 pm
Neighbours Fight - Updatenews360
Quick Share

அரியலூர் : கரும்பு தின்றுவிட்டு சக்கைகளை பக்கத்து வீட்டில் எரிந்ததால் இரு வீட்டாருக்கு இடையே மோதல் வெடித்து பெண்ணை தாக்கிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அரியலூர் ராஜீவ் நகரில் வசித்து வருபவர் செல்வராஜ். இவர் அரியலூர் போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இதேபோல் இவரது வீட்டின் அருகாமையில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவர் தனியார் கூரியர் நிறுவனம் நடத்தி வருகின்றார். இரு குடும்பத்தினரிடையே அடிக்கடி தகராறு நடக்கும் எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜின் பத்து வயது மகன் மற்றும் அவனது நண்பர்கள் மாடியிலிருந்து கரும்பை தின்றுவிட்டு அதன் சக்கையை ரவிச்சந்திரன் வீட்டில் எறிந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட ரவிச்சந்திரன் அவரது மனைவி மற்றும் மகன் ஆகிய 3 பேரும் செல்வராஜன் வீட்டிற்கு சென்று குப்பை ஏன் போட்டீர்கள் என கூறி கேட்டுள்ளனர்.

அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜின் மனைவி, ரவிச்சந்திரன் மனைவி மற்றும் அவரது மகனை அரிவாள் கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனை கண்ட ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகன் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜின் மனைவியை கீழே தள்ளி தாக்க முற்பட்ட தாக கூறப்படுகிறது. இந்த சண்டையினை இருதரப்பு குடும்பத்தினருமே தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

இதனையடுத்து செல்வராஜிடம் அவரது மனைவி தகவல் கூற நேற்று மாலை செல்வராஜ் தரப்பினர் அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் ரவிச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தாருடன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். இரு தரப்பின் மீதும் குற்றம் இருப்பதால் சமாதானமாக செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சமாதானம் ஆக விரும்பாத செல்வராஜ், ரவிச்சந்திரன் மற்றும் அவர் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்தாக வேண்டும் கூறியுள்ளார். பின்னர் இரு தரப்பினரும் பிரச்சினைகளை மறந்து சுமூகமாக நடந்து கொள்ளவேண்டும் என காவல்துறையினர் வலியுறுத்தியதின் பேரில் இரு தரப்பினரும் ஒப்புதலுடன் பிரச்சினையை சமரசமாக பேசி முடித்துள்ளனர்.

இந்த முடிவினால் திருப்தி ஏற்படாத செல்வராஜ் தனது மனைவியை ரவிச்சந்திரன் குடும்பத்தினர் தாக்கப்பட்டதாக கூறி 8 வினாடிகள் அடங்கிய வீடியோவினை வாட்ஸ் அப்பில் பல்வேறு குழுக்களுக்கு அனுப்பி உள்ளார். மேலும் இரு வீட்டார் போட்ட குடுடிமைப்பிடி சண்டை காட்சிகள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Views: - 0

0

0