கள்ளக்காதலனுடன் ஊர் சுற்ற தடை போட்ட கணவன்..!! கூலிப்படையை ஏவி ஆணுறுப்பை சேதப்படுத்திய கொடூர மனைவி..!!

14 August 2020, 4:03 pm
Quick Share

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே கூலிப்படையை ஏவி கணவரின் ஆணுறுப்பை சேதப்படுத்தி கொலை செய்ய முயன்ற மனைவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட கணேஷ் மற்றும் காயத்ரி இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். காயத்ரிக்கு திருமணத்திற்கு முன்பே யாசீன் என்பவருடன் காதல் இருந்ததாகவும், திருமணத்திற்குப் பின்னர் அது கள்ளக்காதலாக தொடர்ந்து, அவருடன் ஊர் சுற்றிக் கொண்டு இருந்தகவும் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, தனது காதலியை யாசீன் அருகில் வைத்து பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு பிளே ஸ்கூலை காயத்ரி இருக்கும் பகுதியிலேயே தொடங்கி மிகவும் வசதியாக, தனது கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளார். தனது அண்ணன் தொழில் செய்யப்போவதாக பொய் கூறி காயத்திரி தனது கணவனிடம் ரூ.10 லட்சம் வாங்கி இந்த பிளே ஸ்கூல் தொடங்குவதற்கு யாசீனிடம் கொடுத்ததாக தெரிகிறது.

காயத்ரி வீட்டின் அருகிலேயே பிளே ஸ்கூல் இருந்ததால் காயத்ரியும் யாசீனும் அடிக்கடி தனது கள்ளக்காதல் லீலைகளில் ஈடுபட்டு வந்து உள்ளனர். இந்த நிலையில், காயத்திரியின் கணவர் கணேஷ் 10 லட்ச ரூபாயை அண்ணனிடம் இருந்து திருப்பி வாங்கி வா என்று காயத்ரியிடம் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காயத்திரி தனது கள்ளக்காதல் வெளியே தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் கணவரை கூலிப்படையை வைத்து கொலை செய்ய திட்டமிட்டார்.

இந்நிலையில், யாசினிடம் பணம் கொடுத்து கூலிப்படையை ஏவி தனது கணவர் கணேஷ்யை கொலை செய்யுமாறு காயத்ரி தெரிவித்துள்ளார். வீட்டின் பின் கதவை சம்பவத்தன்று பூட்டாமல் காயத்ரி வைத்திருந்ததால், அதன் வழியாக யாசின் மற்றும் கூலிப்படையினர் உள்ளே வந்து கணேஷின் தலையில் கத்தியால் வெட்டி, கணேஷின் ஆணுறுப்பையும் சிதைத்து சென்றதாக கூறப்படுகிறது. போலீஸ் விசாரணையில், கணேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் அந்தப் பெண்தான் கூலிப்படையை ஏவி கணேஷின் ஆணுறுப்பை சேதம் செய்ததாக கூற காயத்ரி திட்டமிட்டு இருந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், போலீசாரின் சந்தேகப்பார்வை காயத்ரி மீது இருந்தது, அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்ததில் காயத்ரி வேறு வழியின்றி உண்மையை தெரிவித்து உள்ளார். மேலும், காயத்ரிக்கு உறுதுணையாய் இருந்த விஜயகுமார் கருணாகரன் ஆகிய இரண்டு கூலிப்படை நபர்களையும் காயத்ரியையும் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள யாசினை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தற்போது கணேஷ் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 7

0

0