தனியார் பள்ளிக்குள் நுழைந்த காட்டு யானை : கொட்டும் மழையிலும் கொம்பன் அட்டகாசம்!!

28 November 2020, 1:05 pm
Elephant - Updatenews360
Quick Share

நீலகிரி : மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் தனியார் பள்ளியில் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி, மாயார் , சிங்காரா, வாழைத்தோட்டம் , உள்ளிட்ட கிராம பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் அடிக்கடி வன விலங்குகளின் நடமாட்டமும் காணப்படுகிறது.

சமீபகாலமாக வாழைத்தோட்டம் மாவனல்லா உள்ளிட்ட சாலைகளில் ஒற்றை காட்டு யானை உலா வருவதால் வாகன ஓட்டிகளும் அப்பகுதி கிராம மக்களும் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் காட்டு யானை நுழைந்தது இதை சற்றும் எதிர்பார்க்காத பள்ளி பணியாளர்கள் அச்சத்துடன் வெளியே வராமல் பள்ளியினுள் தஞ்சமடைந்தனர்.

சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பள்ளி வளாகத்தில் சுற்றி வந்த காட்டுயானை பிறகு வனப்பகுதிக்குள் சென்றது. தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது .

எனவே கிராமப் பகுதிக்குள் சுற்றி வரும் ஒற்றை காட்டு யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 0

0

0