விவசாய நிலங்களில் நுழையும் காட்டுயானைகள் : வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan20 August 2021, 11:42 am
திண்டுக்கல் : கொடைக்கானல் கீழ் மலை பகுதியில் தொடரும் காட்டுயானை அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம் அச்சமடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கீழ் மலை கிராமங்களான தாண்டிக்குடி , பேத்துப்பாறை, அஞ்சுவீடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அமைந்துள்ளது.
இங்கு வசிக்கும் மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகவும் இருந்து வருகிறது. தொடர்ந்து அண்மைக்காலமாக வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது.
இதில் யானை அட்டகாசம் கீழ்மலை பகுதியில் தொடர்ந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்து வருகின்றனர். விவசாய நிலங்களுக்குள் காட்டுயானை முகாமிட்டு வருவதால் விவசாயம் மேற்கொள்ள முடியவில்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
எனவே வனத்துறை விரைந்து வனப்பகுதிக்குள் யானையை விரட்ட வேண்டுமென பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் ..
0
0