வன உயிரினங்கள் கணக்கெடுக்கும் பணி : தன்னார்வலர்களுடன் கைகோர்த்த மாணவர்கள்!!!

25 February 2021, 1:11 pm
Kanyakumari Sensex - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : வன உயிரினங்கள் கணக்கெடுக்கும் பணியில் தன்னார்வலர்களுடன் 100-க்கும் மேற்பட்ட ஊட்டி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி வன உயிரின சரணாலயத்தில் நடப்பு ஆண்டுக்கான வனஉயிரினங்கள் கணக்கெடுப்பு தொடங்கியது. முன்னதாக வனவிலங்கு கணக்கெடுப்பு தொடர்பான விரிவுரை வனப்பணியளர்கள், ஊட்டி வனவியல் உயிரின கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நேற்று பயிற்சி வழங்கப்பட்டது.

இன்று கன்னாயாகுமரி வன உயிரின சரணாலயத்திற்கு உட்பட்ட 26 பீடங்களில் ஒரு பீட்டிற்கு 4 நபர்கள் என்ற கணக்கில் 100 நபர்கள் இக்கணக்கெடுப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

பூதப்பாண்டி, அழகியபண்டியபுரம், வேளிமலை, குலசேகரம், களியல் ஆகிய வனச்சரகங்களுக்கு உட்பட்ட இடங்களில் வனவிலங்குகளின் கால்தடங்கள் மற்றும் எச்சங்களின் அடிப்படையில் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

Views: - 7

0

0