Categories: தமிழகம்

DMK FILES ஜெட்டில் போகுதா? எக்ஸ்பிரஸ்ல போகுதானு இனி தான் பார்க்க போறீங்க : வானதி சீனிவாசன் ட்விஸ்ட்!!

DMK FILES ஜெட்டில் போகுதா? எக்ஸ்பிரஸ்ல போகுதானு இனி தான் பார்க்க போறீங்க : வானதி சீனிவாசன் ட்விஸ்ட்!!

கோவை டாடாபாத் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் வளர்க்கும் விருட்சம் எனும் திட்டத்தை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் மரக்கன்றுகளை நடவு செய்து துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பள்ளி குழந்தைகளுக்காக கோவை தெற்கு தொகுதியில் பல்வேறு திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறோம், தற்போது விருட்சம் என்ற திட்டத்தின் மூலம் கோவை மாநகராட்சியில் உள்ள 7 பள்ளிகளில் குறுங்காடுகள் வளர்க்கும் இந்த திட்டத்தை துவக்கி உள்ளோம்.

இதன் மூலம் குழந்தைகளுக்கு மரம் நடும் ஆர்வம் பொறுப்பும் உருவாகிறது.கரிமல வாயு வெளியிடு அதிகமாகி வருகிறது. இதற்கு சமமாக கார்பன் நியூட்ரல் உருவாக்க வேண்டும் இதற்கு தகுந்தாற் போல் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் மரம் நட வேண்டும்.

மாநகராட்சி இது மாதிரியான திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.குறுங்காடுகள் வளர்ப்பதில் நீடித்து வளர்வது உள்ளூர் மரங்கள் மட்டுமே.சாலை விரிவாக்கத்திற்கு எடுக்கபடும் மரங்கள் இன்னொரு இடத்தில் வைக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை.
அமைச்சர் சேகர்பாபு ,அண்ணாமலை குறித்து விமர்சனம் செய்ததற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், திமுக பைல்ஸ், எக்ஸ்பிரஸில் ஏறுகிறதா, ஜெட்டில் ஏறுகிறதா, என்பதை பார்க்கத்தான் போறோம்.

மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பதற்கு ஆசிரியர்களே இல்லை,அடிப்படை வசதிகளும் இல்லை. டெங்கு தடுப்பு குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், கொசு மருந்து அடித்ததை பார்த்ததே இல்லை, எனது சட்டமன்ற அலுவலகத்தில் கொசு அடிப்பதே என்னுடைய வேலையாக இருக்கின்றது.

மாநகராட்சி ஆணையாளர் மாற்றம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர். அரசு அதிகாரிகள் தன்னுடைய வேலையை செய்வதற்கு முன்னரே அதிகாரிகள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகின்றனர்.

அடிக்கடி அதிகாரி மாற்றத்தை கை விட வேண்டும். திரைத்துறை ஆட்சிகாரர்களுக்கு செழிப்பாக உள்ளது. அதை தாண்டி யாராவது படத்தை விட்டார்கள் என்றால் அவர்களுக்கு தியேட்டர் கிடைக்காது . இதற்கு லியோ திரைப்படம் ஒரு முன் உதாரணம். இதனால் தான் ரெட்டிக்கு சாதகமாக இருக்கிறார்கள்.

மற்றவர்களுக்கு பலனில்லை,ஒட்டுமொத்த திரைத்துறையை கையில் வைத்துள்ளனர். இதற்கு முன்னர் இப்படி இருந்ததால்தான் இவர்களின் ஆட்சி தூக்கி எறியப்பட்டது என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

31 minutes ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

1 hour ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

2 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

2 hours ago

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

4 hours ago

இனி கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை? காவல் ஆணையர் திடீர் உத்தரவு…

நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…

4 hours ago

This website uses cookies.