தமிழகத்தில் கல்லூரிகள் 1 ஆம் தேதி முதல் திறக்கபடுவதால் அறிவிக்கப்பட்ட தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
வரும் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என்றும் செய்முறை தேர்வுகள் நேரடியாக நடைபெற உள்ளதால் இதில் மாணவர்கள் எந்த குழப்பமும் அடைய வேண்டாம் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் தேர்வுகள் இல்லாத நாளில் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறும் எனவும் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டும் தான் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருவதால் இருமொழி கொள்கை தான் பின்பற்றுவதில் தமிழக அரசின் நிலைப்பாடு உறுதியாக உள்ளதாக திட்டவட்டமாக தெரிவித்தார்.
வேண்டுமென்றால் மாணவர்கள் மூன்றாவது மொழியினை தேர்வு செய்து விருப்ப பாடமாக படிக்கலாம் என கூறினார். மும்மொழி கொள்கையை பின்பற்ற கூறும் மத்திய அரசு மூன்றாவது மொழியாக வடமாநிலங்களில் தென் மாநிலங்களின் மொழியை பயிற்றுவிக்க ஆளுநர் முன் வருவாரா என்ற கேள்வியை அமைச்சர் பொன்முடி எழுப்பினார்.
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
This website uses cookies.