இப்படியே இருக்குமா? இணையத்தில் வைரலாகும் ரூ.9.5…. ட்ரெண்டாக்கும் நெட்டிசன்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2022, 10:05 am
Petrol - Updatenews360
Quick Share

கடந்த மார்ச் 22ம் தேதி முதல் மெல்ல மெல்ல மீண்டும் விலை உயர்ந்து காணப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகின.

இதையடுத்து கடந்த 45 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல் டீசலுக்கான கலால் வரியை குறைத்து உத்தரவிட்டுள்ளார்.

பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி ரூ.6 குறைக்கப்பட்டுள்ளதால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50 குறைப்பு, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

111 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 10 ரூபாய் வீதம் குறைய உள்ளதால் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த நிலையில் ட்விட்டரில் ரூ.9.5 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

Views: - 2563

0

0