தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமா செயல்படுதா? ஈவிகேஎஸ்க்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் எல்.முருகன்!
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை, மீன்வளத்துறை அமைச்சர் எல் முருகன் இன்று காஞ்சிபுரம் வருகை புரிந்தார்.
காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு வருகை புரிந்த அவருக்கு சங்கர மடம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட பின், காஞ்சி சங்கர மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து இருவரும் 15 நிமிடம் தனிமையில் உரையாடினர். அதன்பின் அமைச்சர் எல்.முருகனுக்கு, சங்கர மடம் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டது .
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் , காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளி மாநில ஆன்மீக சுற்றுப்பயணத்தில் இருந்து தற்போது திரும்பி உள்ள நிலையில், தேர்தல் பணிகள் காரணமாக அவரை சந்திக்க இயலாத நிலையில், தற்போது அவரை சந்தித்து ஆசி பெற்றதாக தெரிவித்தார்.
உலக நன்மை மற்றும் மக்கள் அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்தித்ததாகவும், வரும் தேர்தலில் 400 இடங்களில் பாஜக மிகப்பெரிய வெற்றிய பெறும் எனவும் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்பார் எனவும் உறுதிபட பேசினார்.
தேர்தல் ஆணையம் மோடியின் அலுவலக பணியாளர் போல் செயல்படுவதாக இவிகேஎஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளது குறித்து கேட்டபோது, தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமான அமைப்பு எனவும் அப்படி மோடியின் சார்பாக செயல்பட்டிருந்தால் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் மற்றவர்கள் எப்படி ஜெயித்திருக்க முடியும் என்றும் அரசியல்வாதிகள் தவறான தகவல்களை பரப்புகிறார்கள், தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் தனது பணியை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.
தேசிய செய்தி தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்டது வரவேற்பதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க: HEAT STROKE பாதிப்பு.. ஷாருக்கான் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் : மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை!
இந்த சந்திபின்போது பாஜக மாவட்டத் தலைவர் கே எஸ் பாபு, மாவட்ட பொது செயலாளர் ருத்ரகுமார், பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் மாநில துணைத்தலைவர் கணேஷ், ஓம்சக்தி பெருமாள் , ஜம்போடை சங்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.