காற்றாடியால் பறி போன உயிர் : ரயில் பெட்டி மீது நின்ற போது மின்கம்பி உரசி பரிதாப பலி!!
Author: kavin kumar23 November 2021, 8:17 pm
சென்னை: வண்ணாரப்பேட்டையில் ரயில் பெட்டியின் மீது ஏறி காற்றாடி முயன்ற பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள வ.உ.சி ரயில்வே யார்டில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அப்துல்வாகிப் என்ற பள்ளி மாணவன் பறந்து வந்த காற்றாடியை பிடிப்பதற்காக அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் பெட்டியின் மீது ஏறி அதை எடுக்க முயன்றுள்ளான். அப்போது மேலே சென்ற உயிர்மின்னழுத்த கம்பி மீது மாணவனின் கை பட்டு மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டு கிழே விழுந்துள்ளான்.இதைபார்த்த ரயில்வே ஊழியர்கள் மாணவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0