வின்னர் பார்ட் -2 எப்படி இருக்கும்.? நடிகர் பிரசாந்த் சொன்ன சுவாரசியமான தகவல்.!

Author: Rajesh
1 July 2022, 2:12 pm
Quick Share

90-களில் கோலிவுட்டில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் பிரசாந்த். அவருடைய படங்களுக்கு எப்போதும் பெரிய ஓபனிங் இருக்கும். இளம் பெண்களுக்கு பிடித்த சாக்லேட் பாயாக வலம் வந்தார். ஆனால் தற்போது பார்ம் அவுட் ஆகியுள்ளார். கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுக்கும் வகையில் இந்தியில் சூப்பர் ஹிட்டான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆன ‘அந்தகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்தை பிரசாந்தின் அப்பா தியாகராஜன் இயக்கியுள்ளார்.

நடிகர் பிரசாந்த் சமீபத்தில் திருச்செந்தூர் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் “அந்தகன் படத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளியாகும். ‘வின்னர் 2’ திரைப்படம் முதல் பாகத்தை விட பிரமாண்டமாக இருக்கும். ரசிகர்கள் என் மீது அதிக அளவு அன்பு வைத்திருக்கிறார்கள். அவர்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

Views: - 184

1

0