சாலையில் இரு குழந்தைகளுடன் தவித்த பெண் : காவல்துறை உதவியுடன் காப்பகத்தில் ஒப்படைப்பு!
26 August 2020, 11:40 amகோவை : தாய் தந்தையை இழந்து கணவனால் கைவிடப்பட்டு இரு குழந்தைகளுடன் சாலையில் சுற்றித்திரிந்த பெண்ணை காவல்துறையினர் விசாரணை நடத்தி காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையப் பகுதியில் கையில் குழந்தையுடன் சுமார் 30 வயது இளம்பெண் நான்கு வயது பெண் குழந்தை மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தை உடன் சுற்றி திறந்துள்ளார்.
சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் தெரியவந்தது. அவருக்கு தாய் மற்றும் தந்தை இல்லாத நிலையில் கணவரால் கைவிடப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
அவர் சேலம் மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் மூலம் மேட்டுப்பாளையம் வந்துள்ளார். அதன்பின்னர் எங்கு செல்வது என தெரியாமல் சுற்றித்திரிந்த அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அவர்கள் சிபாரிசு படியும் காரமடை காவல் சரகம் எல்லைக்குட்பட்ட சிகாரம் பாளையம் பகுதியிலுள்ள அன்புமலர் காப்பகத்தில் தாய் மற்றும் குழந்தைகளை மேட்டுப்பாளையம் தனிப்பிரிவு தலைமை காவலர் கண்ணன் மற்றும் காவலர் மாடசாமி மற்றும் காவலர் காமராஜ் ஆகியோர் ஒப்படைத்தனர்.