தேனி அருகே பெண் மற்றும் ஒன்றரை வயது குழந்தை கொலை : கறிக்கடைக்காரரின் கள்ளக்காதலால் விபரீதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2021, 8:17 pm
Illegal Contact Murder -Updatenews360
Quick Share

தேனி : சின்னமனூர் அருகே கள்ளக்காதலி மற்றும் ஒன்றறை வயது கைக்குழந்தையை வெட்டிக் கொன்ற கறிக்கடைக்காரர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் புதுபட்டியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் தனது மனவி கலைச்செல்வி மற்றும் ஒன்றரை வயது குழந்தையையும் காணவில்லை என உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காணாமல் போன பெண் பற்றியும் பெண்ணுடன் யார், யார் கடைசியாக தொலைபேசியில் பேசியுள்ளனர் என சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் உத்தமபாளையம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் சின்னமனூரை சேர்ந்த சிலம்பரசகண்ணன் என்ற நபருடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதனையடுத்து சிலம்பரசகண்ணணை போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் புதுபட்டியை சேர்ந்த இளம்பெண் கலைச்செல்விக்கும், சிலம்பரசகண்ணணுக்கும் கள்ளகாதல் இருந்ததாகவும் கள்ளக்காதலியிடம் 50 சவரன் நகை மற்றும் பணத்தை ஏமாற்றி வாங்கியதாகவும், அதை திரும்ப தறுமாறு கலைச்செல்வி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து தொந்தரவு செய்ததால், கலைச்செல்வியை சின்னமனூரில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்து துணியால் கலைச்செல்வி மற்றும் அவளது ஒரு வருட குழந்தையை கழுத்தை இருக்கி கொன்று விட்டதாக சிலம்பரசகண்ணன் கூறியுள்ளார்.

மேலும் கொலைக்கு தனது கரிக்கடையில் வேலைபார்க்கும் ராஜேஸ் என்ற 19 வயது இளைஞர் உதவியுடன் கரி வெட்டும் கத்தியால் கலைச்செல்வியையும் அவளது குந்தையையும் வெட்டி உடலை சாக்குபையில் போட்டு சின்னமனூர் அருகே உள்ள கருங்காட்டான் குளத்தில் கடந்த ஒருவருடத்திர்க்கு முன்பு வீசியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து உத்தமபாளையம் போலிஸார் கருங்காட்டன் குளத்தில் சிலம்பரசகண்ணனை அழைத்து சென்று பிரேதத்தை கைப்பற்றி தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடுர கொலை செய்த சிலம்பரசகண்ணண் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த ராஜேஷ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 136

0

0