பட்டா மாற்றம் செய்ய விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ : கையும் களவுமாக கைது!!

30 January 2021, 5:41 pm
Bribery Vao Arrest - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : விவசாயிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளாத்துகோட்டை கிராமத்தில் மூர்த்தி என்ற விவசாயிடம் வீட்டின் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் மோகனப்பிரியா என்பவரை காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை கைது செய்தனர்.

விவசாயியிடம் லஞ்சம் பெற்றபோது பெண் கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1

0

0