குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை

17 June 2021, 11:27 pm
Quick Share

சென்னை: மாதவரம் அருகே குழந்தை பெற்றுக் கொள்ள முடியாததால் விரக்தியில் மனமுடைந்து இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மாதவரம் அடுத்த மூலக்கடை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவரது மனைவி கனிமொழி.கடந்த இரண்டு வருடம் முன்பு திருமணம் நடந்து இருவரும் வாழ்ந்து வந்த நிலையில் கனிமொழியின் மாமியார் அடிக்கடி மலடி என கூறி வந்ததாக குறப்படுகிறது. உன்னால் பிள்ளை பெற முடியாது என கூறி துன்புறுத்தி உள்ளார். இதனால் ஆறு மாதத்திற்கு முன்பாக தான் கர்ப்பமாக உள்ளதாக கனிமொழி பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். பின்பு , பெரம்பூரில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டருக்கு ரஞ்சித் மற்றும் கனிமொழி இருவரும் சென்றுள்ளனர். மாலையில் ஸ்கேன் ரிப்போர்ட் தருவதாக கூறியதன் பேரில் கணவர் ரஞ்சித் குமார் ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்க சென்றுள்ளார்.

அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர்கள் உங்கள் மனைவி கர்ப்பமாக இல்லை என்று தெரிவித்த உடனே மனைவிக்கு போன் செய்துள்ளார். ஆனால் கனிமொழி போன் எடுக்காததால் சந்தேகமடைந்த ரஞ்சித் வீட்டின் அருகே உள்ள நபருக்கு போன் செய்து வீட்டின் கதவைத் தட்டி பார்க்கும் போது கதவு திறக்கவில்லை என ரஞ்சித்திடம் தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கிருந்து வீட்டிற்கு வந்து ரஞ்சித் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மேல் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் தெரிவித்து நிலையில் அங்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே கனிமொழி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கனிமொழியின் தாயார் லட்சுமி அளித்த புகாரின் பேரில் மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Views: - 151

0

0